உங்களுக்குத் தேவையான எல்லா வெற்றி வாய்ப்புகளும் உங்களிடம் உள்ளதா?
நம்மில் சிலரிடம் இருக்கலாம்! பயன் தருகின்ற வெற்றி வாய்ப்புகளின் ரகசியங்களை பாப் பர்க் அறிந்துள்ளார். காலத்தை வென்றதும் நிரூபிக்கப்பட்டதுமான தொழில் நுட்பங்களை உங்கள் முன் வைக்கிறார். தொடக்க நிலையில் உள்ளவர்கள் தவிர அனுபவம் பெற்று தொழில் புரிவோர் ஆகிய இரு வகையினருக்கும் ஆற்றல் மிக்க ஒரு வழிகாட்டியாக உள்ளது இப்புத்தகம்; தகுதி வாய்ந்த நபர்களை தங்கள் தொழிலுக்குள் திறமையாகவும் எளிதாகவும் இணைத்துக் கொள்ள இது துணை நிற்கிறது. உங்களுக்கு அருகில் எப்போதும் இருப்பதும், தவிர உங்களுக்கு தேவையானவற்றையும், வெற்றி வாய்ப்புகளையும் தருவதுமான ஒரே கையேடு இது மட்டுமே. இதன் மூலம் பிசினஸ்க்கான வெற்றி வாய்ப்புகளை எப்படி வளர்த்துக் கொள்ளலாம் என்பதைத் துல்லியமாக நீங்கள் அறியலாம்.