வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஆளப்பிறந்த மருது மைந்தன், நாவல் தமிழகத்தில் நூல் வடிவம் பெற்றுக்கொண்டிருக்கிறது. 1920 முதல் 1945 வரையில் மலாயாவில் நடந்த வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் உணர்ச்சியும் உருக்கமும் இழையோட இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. இது கற்பனைக் கதைதான் என்றாலும் மையப் பாத்திரங்களாக இதில் வரும் தயாபரனும் அவன் சகோதரி மதுராவும் உயிர்த்துடிப்புடன் என் கண் எதிரில் இப்பொழுதும் நடமாடுகிறார்கள்.உங்கள் நினைவுகளிலும் நிலைத்திருக்க உங்கள் கரங்களில் தவழும் ,அமுத சுரபிகள் நூலைப் படித்துப் பாருங்களேன்.