விஜி வரதராஜன் எத்திராஜ் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்துள்ளவர். இவர் தனது அம்மா மற்றும் மாமியாரிடமிருந்து சமையல் கலையை கற்றுக் கொண்டவர். அவர்கள் சமையலைப் பற்றி சொல்லிக் கொடுத்தவிதம் இவருக்குசமையலின் மீது ஆவலை ஏற்படுத்தியது. இவர் சமைக்கும் உணவிலுள்ள சத்துக்களையும் சுகாதாரத்தையும் பற்றி ஆராய்ந்து பல்வேறு உணவு வகைகளை எழுதியுள்ளார். இவர் கொடுத்துள்ள சமையல் குறிப்புகளை மக்கள் நடைமுறையில் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர் எழுதிய சமையல் புத்தகங்களின் மூலம் உலக அளவில் பிரபலமாகி உள்ளார். இவர் எழுதிய 4 சமையல் புத்தகங்களுக்கு 6 பிரிவுகளில் விருதுகள் உலக கூர்மான்ட் புத்தக விருது கிடைத்துள்ளது.