வேளாண் சமூகத்தின் வளர்ச்சியை, வீழ்ச்சியை ஆராய்வதன் மூலம் வேளாண் சமூக வளர்ச்சியோடு இணைந்த அரசின் வளர்ச்சியையும், உருமாற்றங்களையும் கண்டுகொள்ள முடியும். தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள் காட்டும் வேளாண் சமூகம் பற்றியும் ஆய்வு தமிழ்ச் சமூக வரலாற்றின் வளர்ச்சியையும் பின்னடைவையும் அறியப் பயன்படும். இந்த நூல் இம்முயற்சிக்கான முன்னோடி ஆய்வாக அமைந்துள்ளது. பெ. மாதையன் பண்டைய தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நிலைநின்று நோக்குபவர்; தமிழகம் நன்கறிந்த அகராதியியலாளர்; இப்போது பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றுகிறார்.