சங்க கால மக்களின் உணவு வகைகள் உடல் நலத்திற்கு ஏற்றவையாக இருந்தன. மேலும் உணவைச் சுவையுறச் சமைப்பதிலும், உண்பதிலும் அம்மக்கள் சிறந்து விளங்கினர்.. பெரும்பாலும் அக்காலத்தில் உணவினை நீரிட்டு, அவித்தல், வறுத்தல், சுடுதல் வற்றலாக்குதல், எண்ணெயிலிட்டுப் பொரித்தல், ஊறவைத்தல் போன்ற முறைகளைப் பின்பற்றினர்.