இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ என் வாழ்க்கையென்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பசி என்பதே ருசி அல்லவா அது என்று தீருமோ அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுருதி மாறக்கூடுமா நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா