'திரைச்சிற்பிகள்' - சினிமாத்துறையிலுள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அருமையான ஒரு புத்தகம். சினிமாவில் ஆர்வமுள்ள, சினிமாவை நேசிக்கிற, இனிமாவைப் பற்றித் தெரிந்து கொள்ள விஉம்புகிறவ்களுக்கு இது ஒரு பொக்கிஷம்!
நமது திரைப்பட இயக்குநர்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அத்தியாவசியமான புத்தகம். அனுபவம் மிக்க இயக்குநர்களும் அதே நேரம் புதியவர்களும் பெருமளவு பயன்படுகிற விஷச் செறிவுள்ள புத்தகம். புதிய புதிய விஷயங்களைக் கண்டறியவும், இன்ஸ்பிரேஷனுக்கும் நிச்சயம் அவர்களுக்கு இது உதவும்!
நான் இந்தப் புத்தகத்தைப் படித்து நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இந்தப் புத்தகம் எனக்கு ஒரு வகையில் புத்துணர்ச்சி அளித்திருக்கிறது என்றால், அது மிகையில்லை! எனது புதிய படத்தில் நிச்சயம் இதன் பாதிப்பு இருக்கவே செய்யும்.
புத்தகத்தை எழுதியுள்ள பத்திரிகையாளரும் நண்பருமான சிவன் இதற்காக்க் கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிற ஆபூர்வமான படங்களே அதற்கு ஆதாரம்!
எளிய நடையில்... எல்லோருக்கும் புரியும் விதமாக, மேற்குறிப்பிட்ட விஷயங்களை மிகவும் சரளமாக இதில் வெளிப்படுத்தியிருக்கிறார் சிவன். இது ஓர் ஆராய்ச்சிப் புத்தகம். இதை எழுதியதற்காகவே அவருக்கு 'டாக்டர்ய பட்டம் கொடுக்கலாம். சினிமாத் துறையின் சார்பில் அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!
அன்புடன்,சி.வி. ஸ்ரீதர்இயக்குனர்.
'திரைச்சிற்பிகள்' என்ற உங்கள் நூல் தமிழுக்கு ஒரு மிகப்பெரிய பங்களிப்பு!
இன்றும் சினிமா மாணவனாகவே இருக்கும் எனக்கும் தமிழ் சினிமாவை இது வரை கண்டிராத உயரங்களுக்கு எடுத்துச் செல்லவிருக்கும் என் இளைய தலைமுறைக்கும் உங்கள் நூல் ஒரு வரப்பிரசாதம்.
எனது திரைப்படப் பள்ளியில் இந்த நூல் ஒரு பாடப் புத்தகமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறேன்.
நன்றி கலந்த வாழ்த்துக்களுடன்,பாலுமகேந்திரா