1967- தேர்தலில் புகழின் உச்சியில் இருந்த அந்த படிக்காத மேதையை
அவரது உறவினர்களே பொறாமையால் சொந்த ஊரில் 1300-வாக்குகளில் தோல்வியளித்து
அவமானப் படுத்தினர்.
2-10-1975. அண்ணல் காந்தியின் பிறந்தநாள்!
கல்வி அண்ணல் காமாராசரின் இறுதி ஊர்வலம்.
முப்பது லட்சம் மக்கள் வந்து வணக்கம்செலுத்தினர்.
''உயிரோடு இருப்பவர்களின் சிலையை திறந்து வைப்பது சரியல்ல என்பது எனது ஆழ்ந்த கருத்து.
இருப்பினும் காமராசர் என்ற பெருந் தலைவரைப் பொறுத்தவரை 'விதிவிலக்கே' சரிஎன்று எனக்கு
தோன்றியது.எனவே,காமராசரின் சிலையை திறந்து வைக்கிறேன்'' - பாரதப்பிரதமர் நேரு.
***
''காமராசர் தமிழ்நாட்டின் இரட்சகர், கல்வி வள்ளல். - தந்தை பெரியார்...