கும்பகோணம் மகாமகக் குளம், இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள, தஞ்சாவூர்
மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவில் குளம் ஆகும். இது
தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில் குளங்களில் முக்கியமான ஒன்றாக
கருதப்படுகிறது. இதை சார்ங்கபாணி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான குளம் என
நம்பப்படுகிறது. வருடந்தோறும் நடைபெறும்
மாசி மகத் திருவிழாவில் 1 லட்சம் மக்களும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமக
திருவிழாவில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேரும் பங்கு பெறுகிறார்கள்