தமிழின் மீது ஆறாக் காதல் கொண்ட குமரகுருபரர் தமிழையும் மீனாட்சி அம்பிகையையும் இணைத்து அழகான இலக்கியத்தைப் பக்தி மணம் கமழப் படைத்தருளியுள்ளார். இவ்விலக்கியத்தில் இடம்பெறும் வருகைப்பருவத்தில் இடம்பெறும், 'தொடுக்கும் கடவுட் பழம்பாடல், என்னும் பாடலை குமரகுருபரர் பாடிய போது மீனாட்சி அம்பிகை எழுந்தருளி முத்துமாலையை அருளியதாகக் கூறுவர் வளமார்த்த கற்பனைகள் பலவும் இடம் பெற்றுள்ளன.