எங்கிருந்தோ இந்த வாழ்க்கைக்குள்ளே தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த வாழ்க்கையிலிருந்தும் ஒருநாள் நிச்சயம்த வெளியே தள்ளப்படுவோம்.
அப்படி வெளியேற்றப்படுவதற்கு முன் இந்த வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து பார்த்துவிட வேண்டாவா?
அதற்கு வழி காட்டுவதுதான் இந்நூல். வாழ்வில் நிறைவும், நிம்மதியும் நிரம்பித் ததும்ப வேண்டுமானால், வாழ்வின் அலைவரிசைக்கு ஏற்ப நம்மை நாமே தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதைப் பற்றிப் பேசுவதுதான் இந்நூல். மேலைநாட்டுச் சிந்தனைகளைச் சாறு பிழிந்து நம் நாட்டுத் த்த்துவக் கோப்பையில் வாழும் வகை என்று பெயரிட்டு வடித்துத் தந்திருக்கிறார் கா. அப்பாத்துரையார்.
இந்நூலில், வாழ்வைப் பற்றிய புதிய தரிசனங்கள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.