பேரும் புகழுமாகச் சீரும் சிறப்புமாக விளங்குபவர்களின் திறமைகளையும் செயல் முறைகளையும், ஆர்வத்தையும், நோக்கத்தையும், விளக்கமாகத் தெரியப்படுத்தினால், தாங்களும் அத்தகைய நிலைக்கு உயர வேண்டும். என்ற சிந்தனையும் எழுச்சியும் சிறுவர்கள் உள்ளங்களில் தழைத்து செழித்து வளரும்.
இத்தகைய நல்ல நோக்கோடு சாதனைச் சிறுவர்கள் என்னும் இந்நூலை சிறுவர்கள் விரும்பிக் கற்பிக்கும் வண்ணம் எளிய இனிய மொழியில் தெளிவாக விளக்கியுள்ளார் டாக்டர் முத்துக்குமார் அவர்கள்.
பலவிதமான விளையாட்டுகளில் பரிசும் பதக்கமும் பெற்றவர்களையும், அறிவியலில் ஆ்ர்வம் காட்டி அனைவரின் பாராட்டுதலை அடைந்தவர்களையும் இசை, நடனம், நினைவாற்றல் போன்ற கலைகளில் சிறந்து விளங்கியவர்களையும், மற்றவர்க்கு ஆபத்து நேரும்போது தம் சமயோசித புத்தியாலும் திறமையாலும் பிறருக்கு உதவும் பெருங்குணத்தாலும் பலரும் வியக்கும் செயல்களளி் துணிந்து நம்மைத புரிந்தவர்களையும், வயதுக்கு மீறிய வீர தீர விகாச்ச் செயல்களில் தேர்ந்தவர்களாக விளங்கியவர்களையும் இந்நூலில் சந்திக்கும் சிறுவர் சிறுமியர் தாய்களும் அவர்களையும் போல, பலரும் புழந்து பாராட்டும் நல்ல செயல்களில் வல்லவர்களாக விளங்க வேண்டுமென்று சிந்திப்பார்கள். அந்த வகையில் இந்த நூல் பெரிதும் ஊக்கம் தரும் முறையில் அமைந்துள்ளது.
அவர்கள் சிந்தனை வளத்துக்கும் செயல் நலத்திற்கும் உதவுவதற்காக அருஞ்செயல் புரிந்த ஐம்பது பேர் இந்த நூலில் சிறந்த சான்றுகளாக நிற்கிறார்கள்.