நீரிழிவு நோய் இன்று மக்களை பெருமளவு பாதிக்கும் ஒரு முக்கிய நோயாகும். இந்த நோயின் பாதிப்பு, வந்து முதிர்ந்தவர்களுக்கே எற்படுகிறது. என்றாலும் , இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஏன் பிறக்கும் குழந்தைக்கு கூட இந்த நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று இந்தியாவில் கிட்டத்தட்ட நீரிழிவு நோயாளிகள் இருக்கிறார்கள். 2025 ல் நோயாளிகள் உண்டாகிவிடுவார்கள் என்று ஒரு கணக்கு கூறுகிறது. இந்த நோய்க்கு அலோபதி தொடங்கி பலவேறு மாற்று மருத்துவமுறைகளிலும் இதற்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஒரு முறை தோன்றிவிட்டால் இறக்கும் வரை கூடவே இருக்கும் இந்த நோயினால் , இன்று மக்கள் பெரும் அவதிக்கு ஆட்பட்டு வருகிறார்கள். ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருத்தருக்காவது இந்த நோய் இருக்கிறது. இதனால், இந்த நோய் குறித்த முழுவிபரங்களையும் மக்கள் படித்து தெரிந்து கொள்வது அவசியமாகும். இன்றும் புரியாதபல விஷயங்கள் பல உள்ளன. புரிந்த விஷயங்கள் பலவற்றையும் விளக்கி இருக்கும். இருந்தாலும் இன்றும் புரியாத பல விஷயங்கள் பல உள்ளன. புரிந்த விஷயங்களே பரிந்து கொண்ட விதத்தில் தவறுதலாக உள்ளது. எனவே, இந்த நோய் குறித்து மக்களுக்கு இன்னும் கொஞ்சம் சொல்லி தெரிய வைக்க வேண்டியுள்ளது. அதற்காகத்தான் நீரிழிவு தெரிந்தும், தெரியாததும் என்ற இந்த நூலை எழுதினேன்.
முத்துச் செல்லக்குமார்