ஆண்மை குறைபாடு குறித்து இன்று வெளிப்படையாக பேச முடிகிறது. இது குடிம்ப வாழ்க்கையை குலைக்கக்கூடியது. சமூக
சீரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. ஆண்மைக்குறைபாட்டை நோயாளிகளே தங்களுக்குத் தாங்களே, பிறர் கூறும் கூற்றுகளை கேட்டு கண்டுபிடிக்கக்ககூடாது. இது மிகவும் தவறானது மட்டுமல்ல , விபரீதமானது. மருத்துவரின் உதவியோடுதான் ஆண்மைக் குறைபாட்டை கண்டுபிடிக்கவேண்டும். இன்றைய தினம் பலரும் ;ஆண்மை குறைபாட்டிற்கு இந்த உணவு நல்லது, அந்த உணவு நல்லது என்று பலரும் கூறுவதை கேட்டு கண்டதையும் உட்கொள்கிறார்கள். சிலர் அதிக வீரியம் கிடைக்கும், அதிக இன்பம் கிடைக்கும் என்பதற்காக பல்வேறு உணவுகளையும் உட்கொண்டு இருக்கிறார்கள். டி.வி விளம்பரம் பார்த்து நமது மக்கள் கடைக்குச் சென்று பல பொருட்களையும் வாங்குகிறார்கள் அதில் முக்கியமானது ஆண்மை குறைபாட்டிற்கான மருந்துகளும் தான். எனவே இந்த மருந்துகளின் தன்மை, செயல்படும் திறன் இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், பிரச்சனைகள், பின் விளைவுகள் என் பலவற்றை குறித்தும் மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. எனவேதான் 'ஆண்மைக் குறைப்பாட்டிற்கான உணவும், மருந்துகளும் ,என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளோம்.
- முத்துச் செல்லக்குமார்.