'கால்புழுதி'யை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கோணத்திலும் நமக்குச் சொல்கிறார் கனக தூரிகா. இதன் மூலம் எல்லாத் தரப்பு நியாயங்களும் நமக்குச் சொல்லப்படுகிறது. அவரவர் நியாயம் அவரவர்க்கு. கி.ரா. பாட்டையாவின் 'கோமதி'க்குப் பிறகு நாம் பார்க்கக் கிடைக்கிற ராமண்ணா என்கிற ராமக்கா, ''நல்லவேள கோமளம். நான் புள்ளையேதும் பெத்துக்கல. எனக்கும் வயசு அம்பதுக்கு மேல ஆச்சு. இப்படியே கன்னிகிழமா போயிடறேன்" என்று சொல்லும்போது சிரிப்பு வரவில்லை. மனசு கனக்கிறது.
- சுகா
இல.கனகலட்சுமி என்கிற கனக தூரிகா கோவையில் பிறந்து வளர்ந்தவர். இளங்கலை பட்டதாரியான இவர், 'நமது நம்பிக்கை' மாத இதழின் உதவி ஆசிரியர். கால்சென்டர்கள் குறித்த இவரது முதல் நாவலான 'இருள் தின்னும் இரவுகள்' மூலம் சிறந்த இளம் எழுத்தாளராக அடையாளம் பெற்றார். 'கால் புழுதி' இவரது இரண்டாம் நாவல்.