ந்தக் கவிஞனுக்கும் ‘நான்’ நானல்ல. ஆனால் அவனுடைய ‘நானும்’ அதில் ஒளிர்ந்தும் இருண்டும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும். இந்தக் கவிஞனுடைய ‘நான்’ கபடமற்றது. இல்லாத வெளிச்சத்தைத் தன்மீது பரப்பிக் கொள்வதுமில்லை; இருக்கின்ற பெருமிதத்தை அடக்கம் கருதி மறைத்துக்கொள்வதுமில்லை.