ராஜா சந்திரசேகர் – இயக்குநர் பாரதிராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெரரிஸ்ட், மல்லி, நவரஸா ஆகிய படங்களுக்கு வசனங்கள், பாடல்கள் எழுதியுள்ளார். நவரஸா படத்திற்குத் திரைக்கதைப் பங்களிப்பும் செய்துள்ளார். விளம்பரப்பட உருவாக்கங்களில் தற்போது இயங்கி வருகிறார்.