இன்றைய இளைய தலைமுறையினரிடையே மருத்துவராகவும், பொறியில் வல்லுநராகவும் , கணிப்பொறி வல்லுநராகவும்
விளங்க வேண்டும் என்ற ஆவலும் ,ஆர்வமும் பரவலாக விளங்குகின்றது. அதே அளவிற்குச் சம்மாக இன்று ஜ.ஏ.எஸ். பதவி மேல் ஒர் ஆசையும் அதிகரித்து வருகின்றது. பொறியில் துறையினர் மருத்துவத் துறையினருக்கும்கூட இன்றைய நிலையில் நாமும் ஓர் ஜ.ஏ.எஸ் ஆக மாட்டோமா என்ற ஏக்கமும் இருக்கிறது. ஜ.ஏ.எஸ்ஸிற்குப் படித்து தேர்வாக வேண்டும் என்ற உற்சாகமும் அவர்கள் உள்ளத்துல் தோன்றியுள்ளது. காரணம், கலெக்டர் பதவி ஓரு எட்டாக் கனி என்றும், சாதாரணமாக அந்தப் பதவி அவ்வளவு சுலபத்தில் யாருக்கும் கிடைக்காது என்றும் கருதப்பட்டு வந்தது. இல்லை, அது எட்டாக்கனியுமல்ல; எட்டிக் காயுமல்ல என்பதை உணர வேண்டும்.முயன்றால் அவ்வெற்றிக் கனியை யார் வேண்டுதானாலும் பறிக்கலாம். அதன் மூலம் பயன் அடையலாம். பலரும் பயன் அடையச் செய்யலாம். அதற்குரிய சரியான வழி முறைளை அறிந்து உரிய நேரத்தில், உரிய முறைப்படி கற்றால் , கட்டாயம் கலெக்டர் பதவியை அடைய முடியும். சரியான வழிகாட்டுதலும், சரியான நோக்கும் கொண்ட பார்வை தேவை. எல்லாவற்றிக்கும் மேலாக மனம் தான் முக்கியமான மூலதனம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. மனம் மிக வலுவானது.
-அலர்மேல்மங்கை, இ,ஆ.ப..