நான் ஏதாவது திரைப்படம் பார்க்கும் போது ஒரு முடிவுடன் செல்வேன். இது நான் பார்க்க வேண்டிய படம். நான் இயக்க
வேண்டிய, நடிக்க வேண்டிய படம் வேறு. என் கனவுகள் வேறு, இப்போதைய பொழைப்பு வேறு. முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள நல்ல விஷயங்கள், திறமைகள் ஆகியவற்றைக் கவனிப்பதோடு என்க்கு உடன்படாத குணாதிசயங்கள் இருந்தால் அதைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றியே சிந்தித்து, அவரை விட நான் நல்லவன் என்று தம்பட்டம் அடித்துப் பல நேரங்களை வீண்டித்துள்ளேன். தற்போதைய புத்திக் கொள்முதலால் இப்போதைக்கு என் நம்பிக்கை நூறு சதவீதம் நல்லவனாக யாருமில்லை, நானுமில்லை, எவரும் இருக்க முடியாது. எந்த மனிதனைச் சந்தித்தாலும் அவரைப் பற்றி இரண்டு வார்த்தை பாராட்டி பேசுங்கள். கஷ்டப்பட்டவர்கள் எல்லாம் வெற்றி பெற்றதில்லை. ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷடப்பட்டவர்கள் என்பது 'பென்ஜமின் டிசிலெரி' என்பவரின் கருத்து. வெற்றியின் விதையே தேடுதல்தான். எல்லோரிடமும் தனித்தன்மை இருக்கும. அதைத் தேட வேண்டும். இப்படி இருந்தால் வெற்றி கிட்டும் என்று விதிமுறையில்லை. ஆனால் மனதுக்குள் ஒரு விதிமுறை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் சொல்லிவரக்கூடாது. அது தானே வழக்கத்தில் இருக்க வேண்டும். மற்றவர்களின் அறிவை நீ அறிந்தாலே உன் அறிவு கூர்மையாகும். சில நேரம் அக்கிரமங்களைக் கண்டு கொள்ளாமல் போவது கூட ஒரு பாவம்தான். உன் நம்பிக்கையை மற்றவர்களுக்குச்சொல், திணிக்காதே.
-லேனா தமிழ்வாணன்.