கன்னம் ஒரு கண்ணாடி ' என்ற தலைப்பில் வழக்கறிஞர் கிஷோர்குமார் எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பு இது. எழுத்தாளராக இருபது வரிடங்களுக்கு மேலாக எழுதி வரும் எனக்கு பதிப்பாளர் தாமரைப் பதிப்பகம் இரு கரம் நீட்டி ஆதரவளித்து என் சிறுகதை படைப்புகளை வெளியிட முன்வந்ததற்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.
எழுத்தாளராக , வழக்கறிஞராக மனநல ஆலோசகராக , என் மனதில் அதிக தாக்கம் ஏற்படுத்திய வழக்ககுகள் பல. அதில் சிலவற்றை தேர்ந்தெடுத்து எழுதிய சிறுகதைகள் பல பிரபல பத்திரிகைகளில் பல வருடங்களுக்கு வெளியாகின. வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற அந்த கோர்ட் சொல்லும் கதைகளை இப்போது புத்தக வடிவில் வெளியிட்டு உள்ளார்கள். பிரபல எழுத்தாளர் பசுமைக்குமார். இதற்கு முன்னுரையாக தன் உரையை அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
- எஸ். ஆர். கிஷோர்குமார்.