ஆரம்ப காலங்களில் திரைத்துறையில் நடப்பவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. படப்பிடிப்பு நிலையங்களில் என்ன நடக்கிறதென்பது எவருக்கும் புரியாது. ஏதோ நடந்து கொண்டிருப்பது போலிருக்கும். ஆனால் என்னவென்றே புரியாது. புதிர் நிறைந்த மாயலோகமாகத்தான் அது இருந்தது.
இந்த மாயலோகத்தில் நுழைந்த பல படைப்பாளிகளின் திரைப்பணியைப் பற்றி அறிமுகம் செய்கிறது இந்த நூல்.