நெருஞ்சி அல்லது செப்புநெருஞ்சில் (Tribulus terrestris; Caltrop) ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். நிலத்தில் படர்ந்து வளரும் இதன் வேர் நன்கு பரந்து ஆழமாகச் சென்றிருக்கும். இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. நெருஞ்சியின் இலை, பூ, காய், வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்படு உடையனநெருஞ்சிலானது மண் தரையில் பசுமையாகப் படரும் முட்கள் கொண்ட தரைபடர் செடியாகும். இந்தத் தாவரம் முழுவதும் வெண்ணிற ரோம வளரிகள் காணப்படும். மலர்கள் மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும்.