இது ஒரு சாதாரண காதல் கதைதான். பொருந்தாக் காதல் மற்றும் அவசரக் காதல். இந்த வேக உலகத்தில் காதலும் சரி கல்யாணமும் சரி ஒரு சிலருக்கு மிக வேகமாக நடந்து முடிந்தும் விடுகிறது. அந்த அவசரக் காதலால் என்ன பலன். சுதாரிப்பதற்குள் யாருக்கும் நிற்காத நேரமும் காலமும் அதி வேகமாய் கடந்து சென்று திரும்பிப் பார்த்தால், கண்டதும் கொண்டது என்ன என்ற கேள்வி பலரை நிச்சயம் சிந்திக்கத் தூண்டும். அப்படி ஒரு காதலைத்தான் கதைக்களமாக எடுத்து எங்கள் பாணியில் கொடுத்திருக்கிறோம்.