இதுவும் ஒரு காதல் கதை தான்.. காதலையும் மீறி ஒரு சில விஷயங்களைச் சொல்ல ஆசை..ஆகையால் தான் சற்றே சிந்திக்க வைக்கும் வித்தியாசமான அணுகுமுறை. சந்தர்ப்பவசத்தால் சிலசமயங்களில் சில மனிதர்களின் வாழ்க்கை தடம் புரள்கிறது.. அப்படிப்பட்ட ஒரு நபரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளும் அதைத் தொடந்த புனைவுகளுமே இக்கதை. திகில், காதல், சிறிது மர்மம் அனைத்தும் கலந்த கலவையாய் இக்கதை. நீரஜும், நந்தினியும் இக்கதையின் முக்கிய பாத்திரங்கள்.. அவர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. இவர்களின் காதல் கைகூடுமா?