வித்தியாசமான கதை.. என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்களா? நம்ம ஹாசினி தாங்க.. அவ கேரக்டரே வேற! புயலாக வருகிறாள்.. அதுவும் புல்லட்டில்! காடு பப் என எதையும் விட்டு வைப்பதில்லை ரகுவீர்.. ஒரு சாம்ராஜ்ஜியத்தை பாதுகாத்து திறம்பட வழி நடத்துபவன். பல திட்டங்களை வகுத்து வெற்றிகரமாக செயல்படுத்தினாலும் ஹாசினி எனும் சுனாமியால் அவன் படும்பாடு? ஆனால் புயலும் பூவாக மாறுவதும் ஆச்சரியமே!
இவர்களைப் போல இருவரின் அம்மாக்களின் எண்ணங்களும் மாறுபடுகிறது.. அவர்களின் அப்ரோச்சும் வேறாக இருக்க.. ரகுவீரின் அம்மா வடிவழகி நம் மனதை மிகவும் கவர்ந்தாலும் ஹாசினியின் அம்மாவின் கண்டிப்பும் பயமும் கலக்கமும்..