மரணம் எதிரே நிற்கின்றபோது வாழ்க்கை வாழத் தகுந்தது என்று முடிவு செய்வது எது ? உனது எதிர்காலம், உனது இலக்கை அடைவதற்கான ஏணியாக இல்லாமல் நிகழ்காலத்திலேயே என்னறைக்குமாக சரிந்துபோன பின்பு நீ என்னை செய்யப் போகிறாய் ? ஒரு வாழ்க்கை மறையத் தொடங்குகின்றபோது, ஒரு புதிய வாழ்க்கையை வளர்த்தெடுக்கவோ, ஒரு குழந்தையை பெற்றெடுக்கப் போகிறாய் ? இத்தகைய கேள்விகளுடந்தான் ஆழமான, நுட்பமான நினைவுகளில் போராடுகிறார் பால் கலாநிதி.