மன அழுத்தம் சீர்பட, மனதை அமைதிப்படுத்த, மனதைச் செப்பனிட, மன நிலையை உயர்த்திட, மன மகிழ்ச்சிக்கு, இயலபு வாழ்வுக்கு வழிகாட்ட ஏற்கனவே பல நூல்கள் வந்திருந்தாலும் இயற்கை வாழ்வியல், இயறகை மருத்துவ அடிப்படையில் மன அழுத்தத்தை சீர்படுத்தும், செப்பனிடும், செம்மையாக்கும் கலையை எளிமையாக, இனிமையாக, தெளிவாக தியானமுறை, இயற்கை உணவு முறை,இயற்கை சிகிச்சை முறை மற்றும் ஆசிரியரின் அனுபவங்கள் வாயிலாக அவருக்கே உரித்தான பாணியில் இயற்கை வாழ்வியல் அன்பர்களுக்கும்,பிற தமிழக அன்பர்களுக்கும் விவரிக்கிறார்.
ஆன்மீகத்தில் முன்னேற குறுக்கு வழிகள் சிலவற்றையும் கோடிட்டுக் காட்டுகிறார். எனவே தமிழக அன்பர்கள் படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
பதிப்பகத்தார்
சென்னை