
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Aids Noyum Paalvinai Noigalum
Free shipping over ₹500
இருவருக்கு இடையிலான உடல் உறவின் மூலமாகவே இந்நோய்கள் பெரும்பாலும்
பரவுகின்றன. உலக அளவில் பரவலாக இருப்பது மட்டும் அல்லாமல், சரியான
நேரத்தில் பலனளிக்கும் வகையில் சிகிச்சை பெறாவிட்டால் கடுமையானதும்
நிரந்தரமானதுமான சிக்கல்களைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தும்
திறன்கொண்டவை என்பதாலும் இவை பொது சுகாதார அக்கறையின் பால் பட்டவைகளாகத்
திகழ்கின்றன. மலட்டுத்தன்மை, கருவிரயம், இடமாறும் கர்ப்பம்,
ஆசனவாய்-பிறப்புறுப்புப் புற்று, அகால மரணம் ஆகியவை மட்டுமல்லாமல்
பிறந்தகுழந்தை, சிசு தொற்று நோய்களும் பால்வினை நோய்களின் சிக்கல்களும்
இதன் பின்விளைவுகள் ஆகும். எச்.ஐ.வி. வைரஸ் தொற்று பரவவும் பால்வினை
நோய்கள் துணைபுரிகின்றன.
முப்பதுக்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான உடலுறவால் பரவும்
பாக்டீரியாக்கள், வைரசுகள் மற்றும் ஒட்டுண்ணிகள் உள்ளன. மேகவெட்டை,
கிளாமைடியா தொற்று, மேகநோய், திரிக்கோமோனியம், மென்கிராந்தி, புறப்புறுப்பு
அக்கி மற்றும் பருக்கள், எச்.ஐ.,வி, கல்லீரல் அழற்சி B போன்றவை பால்வினை
நோயால் ஏற்படும் முக்கியமான நோய்கள் ஆகும்.
குறிப்பாக எச்.ஐ.வி., மேகநோய் போன்ற பல பால்வினை நோய்கள் கர்ப்ப மற்றும்
பேறுகாலத்தின் போது தாயிடம் இருந்து சேய்க்கும், இரத்தப் பொருட்களின்
மூலமும், திசு மாற்றத்தின் போதும் பரவுகின்றன.
Topics / குறியீடுகள்