மனித உடலைத் தாக்கும் நோய்களில் எயிட்ஸ் நோய்க்கு மட்டும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எயிட்ஸ் தகாத உடலுறவால் மட்டும் வருவதில்லை. எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தாயின் பால் மூலமும், மருந்தேற்றும் ஊசிகள் மூலமும் இரத்ததானம் மூலமும் தொற்றிப் பரவுகிறது. உலக சுகாதார அமைப்பின் கணக்கின் அடிப்படையில் இதுவரை கோடிக்கணக்கான பேர் எயிட்ஸ் நோயால் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த உயிரிழப்புகள் தேவையா? மனித இனத்தை விழுங்குவதற்கு எயிட்ஸ் என்ற பூதம் வாயைத் திறந்து கொண்டிருக்கிறது. அந்தத் தீய சக்தியின் வாயினுள் நுழைந்துவிடாதபடி தடுக்கப்பட வேண்டும்.