இந்தக் கதை ‘மகிழ்ச்சியான இளவரசன்’ என்பதாகும். ஒரு பெரிய நகரத்தின் நடுவே மிக உயரமான மேடையில் ‘மகிழ்ச்சியான இளவரசன்’ சிலை வைக்கப் பட்டிருந்தது. சிலையின் வெளிப்பகுதி தங்க இழைகளால் இழைக்கப்பட்டதாகவும், கண்களில் விலை உயர்ந்த கற்கள் பொருத்தப்பட்டதாகவும், இடையில் அணிந்திருந்த போர்வாளின் கைப்பிடி மாணிக்கக் கல் பதிக்கப்பட்டதாகவும் அமைந்திருந்தது.மகிழ்ச்சியும் சரி, துன்பமும் சரி, அனுபவமாகக் கூறும் போது கதைகளிலும், கட்டுரைகளிலும், ஊடகங்களிலும் சற்று மிகைப்படுத்தியே சித்தரிக்கப்படுகிறது. ஆஸ்கார் ஒயில்டு என்பவரால் எழுதப்பட்ட கதை உணர்த்தும் மையக்கருத்து இளைஞர்களின் மனதைத் தொடும், நன்மை பயக்கும்.