பழைய காலங்களில் நிலத்தின் அளவுகள் குழி, வேலி, மா என பேச்சு வழக்கத்திலும், ஏக்கர், ஹெக்டேர் என்ற அளவீட்டு முறையிலும் குறிக்கப்பட்டு வந்தது. வீட்டு மனைகளை பொறுத்தவரை சதுர அடி கணக்குகளில் சொல்லப்படுவது இப்போது நடைமுறையாகும். சென்னை போன்ற நகர்ப் புறங்களில் கிரவுண்டு என்ற அளவீட்டில் குறிப்பிடப்படுவதும் நடைமுறையில் உள்ளது.குறிப்பாக வீட்டு மனைகள் வாங்கும்போது சதுர அடி, சென்ட் மற்றும் கிரவுண்டு அளவுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நிலமானது சதுர அடி, சென்ட் அல்லது கிரவுண்டு போன்ற அளவுகளில் இருக்கும்போது அதை வேறொரு அடிப்படை அளவாக எவ்வாறு மாற்றி, அறிந்து கொள்வது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். வீட்டு மனை அளவானது சதுர அடியில் இருந்தால், அதை எவ்வாறு சென்ட் அளவில் மாற்றுவது..? அல்லது சென்ட் அளவை எவ்வாறு சதுர அடியாக மாற்றுவது..? என்ற சுலபமான வழிமுறையை இங்கே காணலாம்.