முன் ஒரு காலத்தில் மரகதத்தீவு என்ற நாடு இருந்தது. இந்த நாட்டின் நாலாபுறமும் கடல் சூழ்ந்து இருந்தது. இந்த நாட்டின் நாலாபுறமும் கடல் சூழ்ந்து இருந்தது. அந்நாட்டு மக்களின் முக்கிய தொழில் முத்துக் குளிப்பதுதான்.கடலில் ஏராளமான நல்ல முத்துக்கள் இருந்தன. இந்த முத்துக்களுக்கு நல்ல விலையும் கிடைத்தது.
முத்துக்களை எடுத்துக்கொண்டு, கப்பலில் சென்று, பல நாடுகளிலும் விற்றுவரும் வணிகர்களும் நிறைய இருந்தார்கள். இவர்கள் வாயிலாக கப்பல் கட்டும் தொழிலும் வளர்ந்து இருந்தது.
மரகதத்தீவில் மழையும் நன்றாகப் பெய்தது. மாதம் மும்மாரிக்குக் குறைவு இல்லை. ஆகவே, பயிர் பச்சைகளும் நன்றாக வளர்ந்தன.