நீலாம்பிகை மகனுக்குச் சாப்பாடு பரிமாறிக்கொண்டு இருந்தாள்.
"சலவைக்கார முத்து காலையிலே வந்திருந்தான்."
"என்னவாம்? மன்னிக்கணுமாமா? இனிமே அவன்கிட்டே சலவைக்குக் கொடுக்காதேம்மா."
"உன்
சட்டையை மாத்தி இன்னொருத்தர் துணியோட வச்சுக் கொடுத்திட்டதுக்கு நானே
நல்லா திட்டிட்டேன் மாதவா. அந்தச் சட்டையை வாங்கிவந்து மறுபடி சலவை பண்ணி
எடுத்துட்டு வந்தான். இனிமே இது மாதிரி நடக்காமல் பார்த்துக்கறேன்னு
கெஞ்சறான்."
"சட்டையை என்ன பண்ணினே?"
"உன் கட்டில் மேலேதான் வச்சிருக்கேன்."
"ஏம்மா... என்னைப்பத்தி உனக்குத் தெரியாதா? எவனோ ஒருத்தன் போட்ட சட்டையை மறுபடி நான் போடுவேனா?"
"அது உன் சட்டைதானே மாதவா?"
"இருந்தாலும்... யாரோ ஒருத்தன் போட்டுட்டானே. என் பொருளை என்னைத் தவிர யாரும் பயன்படுத்தக்கூடாதுன்னு உனக்குத்தான்