அவனுக்குப் பயந்து, கேட்டபடியே அவனுக்கு மட்பாண்டங்களைக் கொடுத்து வந்தான். அவன் அவ்வாறு கொடுத்து வந்த குயவனுக்கு அவ்வரண்மனைச் சேவகன் மீது வெறுப்பு உண்டாயிற்று. 'இவனுக்கு எத்தனை முறை இலவசமாகக் கொடுப்பது? அரண்மனையில் வேலை செய்கிறவன் என்பதற்காக ஒரு முறை, இருமுறை கொடுக்கலாம். இவன் அடிக்கடி வந்து பணம் கொடுக்காமலேயே வாங்கிச் செல்கின்றானே! இவ்வாறாக வாங்கிச் செல்வதையே ஒரு வேலையாகக் கொண்டுள்ளானே! இவனுக்கு இனி கொடுக்கக் வடாது' என்று எண்ணி அவன் மீது வெறுப்பு கொண்டான். அவ்வாறு வெறுப்புக் கொண்ட குயவன் ஒருநாள், அவ்வரண்மனைச் சேவகன் தொலைவில் வருவதைக் கண்டான். கண்ட அளவில் எழுந்து விரைந்து சென்று பனந்தோப்புக்குள் நுழைந்து ஒளிந்து கொண்டான்.