சூரியன் நடுவானில் இருந்தது. காற்றில் பரவி யிருந்த வேப்பம் பூவின் வாசனையை நுகர்ந்தபடியே வேப்பமரத்தடியில் அமர்ந்து ஆளுக்கொரு யோசனை யில் மூழ்கியிருந்தனர் திருவழகனும், குருதேவனும். இருவர் முகத்திலும் ஆயிரம் கவலைகள் இருந்தன. "திருவண்ணா... குருவண்ணா..." இருவரின் யோசனையையும் கலைத்த குரலுக்குரிய சேவிகா மூச்சு வாங்கியபடி இருவரின் முன்னாலும் வந்து நின்றாள்.