“அன்பை முதலீடு செய்தால் உலகம் நம் வசம்! ஆசையை முதலீடு செய்தால் நாம் சிறைவசம்!' இலையுதிர் காலம் முடிந்து... மரங்களும், செடி களும்... இளம் புதிய இலைகளும், தளிர்களும், மொட்டுக் களும், மலர்களுமாய் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த... அழகான வசந்த காலம்! ஆதவன் அழகே உருவாய்... ஆர்ப்பரித்து... கிழக்கு வானில் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அந்த அழகன் பூமிக்காதலியைத் தன் வசப்படுத்தி... தன் கிரகணங் களால் சிறைச் செய்து கொண்டிருந்த... இளங்காலைப் பொழுது!