சித்தம் போக்கு சிவம் போக்கு என்பது ஒரு பழமொழி. இது சித்தருக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பைக் காட்டும். நம் காடுகளும் மலைகளும் இயற்கைக்கு மட்டுமல்லாமல் நமது சித்தர்களுக்கும் இடம் தந்து வந்துள்ளன. சித்தர்கள் இயற்கையின் புத்திரர்கள். இயற்கை வைத்தியமும் தத்துவமும் ஞானமும் அவர்களுக்கு இயற்கை அளிக்கும் கொடை. இது நமது மண்ணின் கொடையுமாகும்.