வித்வான்
வே. லட்சுமணன் 57ஆண்டுகளாக ஜோதிடக் கடலில் மூழ்கி மூழ்கி கொற்கை முத்துகள்
போல் அரிய ஜோதிட நுணுக்கங்களை அறிந்து தெளிந்தவர். அறிந்தவற்றை அழகுத்
தமிழில் அடுத்தவர்களுக்குச் சொல்லவும் தெரிந்தவர். அதனால்தான் ஜோதிட
விற்பன்னர்கள் பாலஜோசியர் வித்வான் வே. லட்சுமணன் அவர்களை ஜோதிட பிதாமகர் -
ஜோதிட சாஸ்திர பீஷ்மர் என்று பெருமையோடு போற்றுகிறார்கள்!
மறைந்த பாரதப்பிரதமர் திருமதி. இந்திராகாந்தி, புரட்சித்தலைவர்
எம்.ஜி.ஆர்., என்.டி. ராமராவ் போன்றவர்கள் பாலஜோசியரைத் தங்கள் சாஸ்திரவழி
காட்டியாக ஏற்றுக் கொண்டனர். ரிலையன்ஸ் அம்பானி, இந்துஜா, ஸ்பிக்
ஏ.சி.முத்தையா போன்ற பெரும் தொழிலதிபர்கள், சரத்குமார் போன்ற திரைப்பட
நட்சத்திரங்கள், பாலஜோசியர் வித்வான் வே. லட்சுமணனின் வழிகாட்டுதலைப்
பெற்று வருகிறார்கள்.