பல
நுட்பமான சாஸ்திரங்களின் தொகுப்பு ஜோதிடக்கலை...! அதில் மூழ்கி
முத்தெடுத்தவர்கள் அபூர்வமானவர்கள், மகா அதிர்ஷ்டசாலிகள் அவர்களில் தான்
கற்றவற்றை கனியின் சுவையோடு இனிமையாக தண்ணீரின் பாங்கோடு எளிமையாக
மக்களுக்குச் சொல்லும் ஆற்றலாளர்கள் வெகு அபூர்வம் பாலஜோசியர் அந்த அபூர்வ
மனிதர்களில் ஒருவர் வித்வான் வே. லட்சுமணன் ஜோதிடக் கலை பற்றி பல்வேறு
கோணங்களில் 2000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதிய எழுத்து மணி அவர் அவரது
கட்டுரைகளைப் படித்தால் ஜோதிடர்கள் ஜோதிட விற்பன்னர்கள் ஆகலாம் ஜோதிடக்
கலையை அறிய முற்படுவோர் அதில் எளிதாக நுழைந்து நுண்மான் நுழைபுலம் பெறலாம் !