ஒரு தனிமனிதரின் சரித்திரத்தைச் சொல்லுவது போன்ற பாவனையில், இதுகாறும் பதிவு செய்யப்படாத 'சூஃபி' குருமார்களின் உலகைச் சித்திரிக்கிறது இந்நாவல். ' குட்டியாப்பா ' வுக்குப் பிறகு நாகூர் ரூமியின் மொழி இதில் நிகழ்த்தி இருக்கும் அசுரப்பாய்ச்சல், விவரிப்புக்கு அப்பாற்பட்டது. முற்றிலும் புதியதொரு வாசிப்பு அனுபவம் தரும் இந்நாவல், அதிகம் பரிச்சயமற்றதொரு புதிய உலகின் பல கதவுகளைத் திறமையாகத் திறந்து காட்டுகிறது.