மனதின் அடியாழத்தில் நாளும் கனவுகளை வளர்த்துக் கொண்டிருப்பவனே சிறந்த சிறுகதையாசிரியன் ஆகிறான். கதைக்கருவிலும் கதை சொல்லும் முறையிலும் கவித்துவமான மொழியிலும் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவை எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள்.
ஒரு படைப்பு திரும்பத் திரும்ப வாசிக்கப்படுவதும், வேறு கலைவடிவங்களுக்கு உருமாறுவதும் தற்செயலானதில்லை. மாறாக, அந்தப் படைப்பு மற்றும் படைப்பாளி காலத்தின் ஊடாகத் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் தாக்கத்தின் அடையாளம் என்றே இருபத்தைந்து ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியச் சூழலோடு ஏற்படுத்தி வரும் தாக்கமும் இத்தகைய ஒன்றே.
எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி, வங்காளம், உருது, தெலுங்கு, கன்னடம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுள்ளன.