புரட்சிக் கவிஞரின் கவிதைகளைப் பேராசிரியர் பலகாலும் விரும்பிக் கற்றவர் என்பதை அவர் எழுதிய இந்நூலால் நிரூபணமாகின்றது. இந்நூல் சிறந்த மொழிநடை, நேர்மையான மதிப்பீடு. கருத்துத் தெளிவு பெற்று விளங்குகின்றது. இலக்கியம் கற்றவர்க்கும் ஆய்வு மாணவர்க்கும் அரிய கருத்துக்களை அள்ளத் தரும் கருத்துக் கருவூலமாக இந்நூல் விளங்கும் என்பது தெளிவு. ஆகவே நாம் இந்நூலைக் கற்போம்: பயன்பல பெறுவோம்.. இந்நூலை வெளியிடுவதில் எங்கள் பதிப்பகம் பெருமை கொள்கிறது.