" தமிழ் இலக்கியங்களில் செய்யுள் நாடகங்கள் மிகக்குறைந்த அளவே உள்ளன. அதன் வளர்ச்சியில் பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர்.ஆ. கணேசன் தம்பங்கிற்கு உலகஜோதி என்னும் இச்செய்யுள் நாடகத்தை உருவாக்கியுள்ளார்.
சன்மார்க்க நெறியைத் தந்த வள்ளலார் வாழ்க்கை நிகழ்ச்சிகளை மையமாக வைத்து வெளிவரும் இச்செய்யுள் நாடகத்தைச் சன்மார்க்க அன்பர்களும் தமிழ் இலக்கியச் சான்றோர்களும் பெரிதும் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்.
"