இப்பொழுது கண்ணதாசனின் திரை இசைப் பாடல்களை மையமாக வைத்துக 'கண்ணதாசன் திரை இசைப் பாடல் திறம் ' என்ற பெயரில் வழங்கியுள்ளேன். இந்நூல் இவ்வரிசையில் முதல் நூலாகும். கண்ணதாசன் திரை இசைப் பாடல் திறம விரிந்து கொண்டே போகும் தகுதி பெற்றிருப்பதால், ஒரே நூலாக இன்றிப் பகுதி பகுதியாக வெளியிடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த முதற்பகுதி, பக்தி, தத்துவம் ஆகிய இரண்டு தலைப்புகளுள் அடங்கக் கூடிய திரை இசைப் பாடல்களின் திறனாய்வு ஆகும். இறையருளால் தொடர்ந்து பல்வேறு பொருள்களிலும் அடங்கி இருக்கின்ற திரை இசைப் பாடல்களின் திறனாய்வு நூல்களை எழுத உள்ளேன்.