நேரம் என்பது அளக்கக் கூடிய ஒன்று ஆகும். இது ஐசக் நியூட்டன் போன்ற அறிவியல் அறிஞர்கள் கொண்டிருந்த இயல்பியல் நோக்கு ஆகும். இதற்கு முரண்பாடான இன்னொரு கருத்துப்படி, நேரம் என்பது அறிவு சார்ந்த அமைப்பின் ஒரு கூறு. இந்த அமைப்பினுள்ளே மனிதர்கள், பல்வேறு நிகழ்வுகளையும் தொடராக்கம் செய்துகொள்கிறார்கள்.