இந்திய விடுதலைப்போரில் திட்டமிட்டு மறைக்கப்பட்ட மறுக்கப்படும் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிகள் குறித்த இந்த நூல் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறந்த தகவல்களை அளிக்கிறது; கம்யூனிஸ்டுகளின் கம்பீரம் கொள்கை, தியாகம் ஆகியவற்றின் மீது அமைந்தது என்ற அடிப்படையை இது வழங்குகிறது. பெருமிதமிக்க நமது சொந்த மக்களின் வரலாற்றில் இந்த போற்றுதலுக்குரிய அத்தியாயங்கள் உரிய இடத்தைப் பெற வேண்டும். நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஆன நிலையில் விடுதலைப்போரின் உண்மை வரலாறு மேலும் விளக்கம் பெற வேண்டிய நிலையேஉள்ளது.
இந்த கிளர்ச்சிகளை அறிய வேண்டியது ஒவ்வொரு புரட்சியாளரின் கடமையுமாகும். இந்த நூல் அதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது.