இவ்ஆய்வு
சிற்றிலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டதால் அவ்விலக்கியங்கள் குறித்த
பல்வேறு கருத்துக்களை ஆராய்வது ஆய்வாளரின் கடமையாகும். சிற்றிலக்கியங்கள்
குறித்துப் பல ஆய்வுகள் நூலாக வெளி வந்திருந்தாலும் அவ்வாய்வுளில்
கூறப்பெறாத கருத்துகள் ஆய்வாளரால் சிந்திக்கப் பெற்றுள்ளன.
சிற்றிலக்கியம் சொல்லும் பொருளும், இலக்கிய உலகில்
சிற்றிலக்கியங்களின் பங்கு, சிற்றியலக்கியங்களின் இலக்கணம்,
சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை, சிற்றிலக்கியங்களின் காலநோக்கு,
சிற்றிலக்கியங்களின் பாடுபொருள் நோக்கு, சிற்றிலக்கியங்களில் உளவியல்
நோக்கு, சிற்றிலக்கியங்களில் நாடகநோக்கு, சிற்றிலக்கியங்களில் பல இலக்கியப்
பண்பு நோக்கு, சிற்றிலக்கிய வகைப்பாட்டுள் சோதிடத்தின் பங்கு ஆகிய
தலைப்புகளில் இவ்வியல் ஆராயப்பெற்றுள்ளது.
சிற்றிலக்கியங்களில் சோதிடம் என்பது ஆய்வுத்தலைப்பாக
இருப்பதால் இவ்வியலின் நிறைவுப்பகுதி சிற்றிலக்கிய வகைப்பாட்டுள்
சோதிடத்தின் பங்கு என்பதைக் குறித்து ஆய்வு செய்துள்ளது.