"என் பணியும் போராட்டமும்" என்ற நூல் தோழர் சின்னப்ப பாரதி அவர்கள் சுய வரலாறு. இது தமது வாழ்க்கை அனுபவங்களின் திரட்டு என்று அவர் கூறுகிறார்.
சின்னப்பபாரதி ஒரு பிரபல முற்போக்கு எழுத்தாள். சிறந்த நாவலாசிரியர். நல்ல பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவர் ஒரு கவிஞரும் கூட. அவது படைப்பாற்றல் பற்றி முற்போக்கு எழுத்தாளரும் கவிஞருமான முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் பின்வருமாறு கூறியுள்ளார்.
"சின்னப் பாரதிக்கு நேந்த சுய அனுபவங்களே அழகும் கம்பீமும் நிரம்பிய நாவல்களாகவும் கதைகளாகவும் வடிவெடுத்தன. அரசியல் இயக்கத்தின் கூறும் தொழிற்சங்க இயக்கத்தின் வீறும் ஊடும் பாவுமாகப் பின்னியவை சின்னப்ப பாரதியின் நாவல்கள்.