மனித சிந்தனையின் வெளிப்பாடான இலக்கியப் பரப்பில் குட்டிக்கதைக்ள் என்பது மிக அற்புதமான ஒன்று, சமூக நடப்பின் கோணல்மாணல்களை, போலிச் சம்பிரதாய நடைமுறைகளை, பெரிய மனித ஆசாபூதித்தனங்களை, அரசியல் கோமாளித்தனங்களை கிண்டலாகவும் குத்தலாகவும் வெளிப்புட்த்த வாய்த்த ஓர் உத்தியிது. சமூக நடப்பிலுள்ள குறைபாடுகள், பிரச்சினைகள் ஆகியவைகளை சமூக நடப்பிலுள்ள குறைபாடுகள், பிரச்சினைகள் ஆகியவைகளை மிருகங்கள் மூலமாகவோ, பறவைகள் மூலமாகவோ பேச வைப்பது அல்லது மனிதர்கள் மூலமாக நறுக்குத் தெறித்தாற்போல உணரவைப்பது இதன் விசேடத் தன்மையாகும்.