ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் புதுப் புது விஷயங்கள் நடைபெறுகின்றன. எனவே நிமிடத்திற்கு ஒரு செய்தி வீதம் நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். உலக அளவில் என்று பார்த்தால் ஒரு நிமிடத்தில் பல ஆயிரம் நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைத்துமே அறிந்து கொள்கிறோம், பல்வேறு வழிகளில் இவற்றில் தேவையானவைகளும் உண்டு.தேவையற்றவைகளும் உண்டு. தேவையானவை மற்றும் பயன் தருகிற செய்திகள் பொது அறிவுச் செய்திகள் எனப்படுகின்றன. இத்தலைப்பில் 1000 செய்திகள் 'தகவல் களஞ்சியம்' என்ற நூலில் வெளியிடப்பட்டது. உங்களுக்குத் தெரியாத செய்திகள்' என்ற இந்நூலில் அறிவியல், கண்டுப்பிடிப்புகள், முதன்மைச்செய்திகள், உடலியல், மருத்துவம், தமிழ் போன்ற தலைப்புகளில் 1000 தகவல்கள் தரப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு உதவிடும் இந்நூல், அனைவருக்கும் உதவிடும். நல்ல நூல்களையே வெளியிட்டுவரும் அறிவுப் பதிப்பகத்தார் இந்நூலையும் சிறப்புற அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள். வாங்கிப் படித்துப் பயன் பெறுக.
- பதிப்பகத்தார்.